Monday, December 5, 2011

செவ்வாய்க்கிரகத்தில் உயிரினங்கள் உண்டா? கண்டறிய விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது.

புளோரிடாவில் இருந்து செலுத்தப்பட்ட அட்லஸ் ரொக்கட் மூலம் செவ்வாய்க்கிரகத்தின் மீது ஆய்வுகளை நடத்தவிருக்கும் நாசா விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. 20 மாடி வீடுகளின் உயரத்தை கொண்ட இந்த விண்கலம் இரண்டு தசம் ஐந்து பில்லியன் டொலர் செலவில் தயாரிக்கப்பட்டு அணுசக்தியினால் இயங்குவதாகும்.

கேப் கனவரலில் இருந்து முற்பகல் பத்து மணிக்கு புறப்பட்ட ரொக்கட்டில் செல்லும் விண்கலம் ஒன்பது மாதங்கள் பிரயாணம் செய்து செய்வாய்க்கிரகத்தைச் சென்றடையும்.

ஒரு மோட்டார் வாகனத்தின் உருவத்தை கொண்ட இந்த விண்கலம் 2012ஆம் ஆண்டின் ஓகஸ்ட் மாதம் ஆறாம் திகதி செவ்வாய்க்கிரகத்தை சென்றடையும். அங்குள்ள குன்றிற்கு சமீபமாக இருக்கும் 154 கிலோ மீற்றர் அகலமான பள்ளத்தாக்கில் இரண்டு வருட காலம் ஆய்வுகளை அது மேற்கொள்ளவிருக்கிறது.

கலிபோர்னியா தொழில்நுட்ப நிலையத்தின் விஞ்ஞானி கருத்து வெளியிடுகையில் ஏனைய கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா என்ற விடயத்திற்கு இந்த பிரயாணம் முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என்று கூறினார்.

செவ்வாய்க்கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கின்றவா என்பதையும் உயிரினங்கள் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளதா என்பதையிட்டும் முக்கிய ஆய்வுகள் இதன்மூலம் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

No comments:

Post a Comment