Monday, December 12, 2011

ஜேர்மனியில் பிரபாகரனின் கட்அவுட்டை எரித்த இருவர் கைது.

கடந்த மாவீரர் தின நிகழ்வுகளில் புலிகளின் இரு குழுக்களிடையே காணப்பட்ட போட்டி காரணமாக ஜேர்மன் டோட்முன்ட பகுதியில் ஒருதரப்பினரின் ஏற்பாட்டுக்கு மறுதரப்பினரால் தீ வைக்கப்பட்டது. டோட்முன்ட் பிரதேசத்தில் வீடொன்றின் களஞ்சிய அறையில் மாவீரர் தின நிகழ்வுக்காக எடுத்துச் செல்ல வைக்கப்பட்டிருந்த , புலிகளின் தலைவர் பிரபாகரனின் கட்அவுட் மற்றும் சோடனைச்பொருட்கள் ஒரு தரப்பினரால் தீ மூட்டப்பட்டிருந்ததில் ரேஜிபோமினாலான பிரபாகரனின் கட்டவுட்கள் பொலித்தினாலான சோடனைப்பொருட்களின் தீயினால் குறிப்பிட்ட வீடும் எரிந்திருந்து நாசமாகியது.

இத்தீவைப்பு தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவந்த ஜேர்மன் பொலிஸார் இருவரை கைது செய்துள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றது. (மேலதிக தகவல்கள் தொடரும்)

1 comment:

  1. Idhaithaan seiya mudiyum, Makkal nenjangalil irundhu edukka mudiyathu.

    ReplyDelete