Tuesday, December 6, 2011

த.தே.கூ விடையே பனிப்போர்! பண்டாரவன்னியன் நற்பணி மன்றுக்கு இரு நிர்வாகங்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிடையே காணப்படும் பதவிப் போட்டிகள் உக்கிரமடைந்து கூட்டமைப்பு இரு பிரிவுகளாக பிளவுபட்டு நிற்பதுடன், அதன்கீழ் இயங்கும் பினாமி அமைப்புக்களை யார் நிர்வகிப்பது என்ற போட்டியும் அங்கே எழுந்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் ஆயுதக் குழுக்களுக்குமிடையேயான முறுகல் மேலும் வலுப்பெற்று வருகின்றது.

தமிழ் தேசியக் கூட்மைப்பு எனும் கட்சியை பதிவு செய்து அதன் தலைமைத்துவத்தினை கைப்பற்றும் நோக்கில் செயற்படும் சுரேஸ் பிறேமச்சந்திரனுடன் புளொட், ரெலோ ஆகிய கட்சிகளுடன் ஆனந்த சங்கரியாரும் அணிதிரண்டுள்ளார்.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழ் இயங்குகின்ற பண்டாரவன்னியன் நற்பணி மன்றத்துக்காக தற்போது இரு நிருவாகங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

வன்னியில் மக்களின் புனர்வாழ்வு நடவடிக்ககைளுக்கு உதவுவது என புனரமைப்பு செய்யப்பட்ட மேற்படி மன்றம் புலம்பெயர் தமிழ் மக்களிடம் நி தியினை பெற்று அப்பணியினை முன்னெடுப்பது என்ற முடிவை எட்டியிருந்த நிலையில், தற்போது அது நிர்வாக தெரிவில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக இரு தலைமைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற , இருவேறு நிருவாகங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

செல்வம் - சுரேஸ் தரப்பினரினரால் சண்மாஸ்ரர் தலைமையில் ஒரு நிர்வாகமும், மாவை தரப்பினரால் சிறிதரன் தலைமையில் ஒரு நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 3.12.11 பிற்பகல் நான்கு மணியளவில் வவுனியா இந்திரன் ஹோட்டலில் இடம்பெற்ற ஒன்றுகூடலில் சண்மாஸ்ரர் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், 4.12.11 முற்பகல் பத்து மணியளவில் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற ஒன்றுகூடலில் சிறிதரன் தலைமையிலான நிர்வாகம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சிறிதரன் வங்கி ஒன்றில் முகாமையாளராக கடமையாற்றியபோது மோசடிகளை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளவராகும்.

இலங்கையில் பல்வேறு சங்கங்கள் இருக்கின்றபோதும், மேற்படி மன்றத்திற்கு ஏன் இவர்கள் மத்தியில் இத்தனை போட்டி என்ற கேள்வி வரலாம். குறிப்பிட்ட நற்பணிச் சங்கம் புனரமைமக்கப்பட்டு இச்சங்கத்தினூடாக புலம்பெயர் தமிழிரிடம் பணத்தினைப்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு , சில புலம்பெயர் நிறுவனங்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள் இதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ள நிலையில் அதனூடாக கிடைக்கப்பெறப்போகும் பணத்தினை கபராது செய்வதற்கே இத்தனை போட்டியும் என வவுனியா மக்கள் தெரிவிக்கின்றனர்.


பண்டாரவன்னியன் நற்பணி மன்றம் மறுசீரமைப்பு கடந்த 31.11.11 அன்று நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து தரப்பினரும் ஒன்றாகவிருந்த காட்சிகளை இங்கு காண்கின்றீர்கள்.







அதேநேரம் தற்போது கூட்டமைப்பினுள் நிலவும் பனிப்போரின் காரணமாக உடைபட்டு நிற்கும் ஒருதொகுதியினர் புதிய நிர்வாக தெரிவுக்கு 04.12.11 அன்று நகரசபை ம ண்டபத்தில் ஒன்று கூடியபோது உள்ளவர்களை இப்படங்களில் காண்கின்றீர்கள். இதில் ஆயுதக்குழுக்களை பிரதிநிதிப்படுத்துகின்ற தரப்பினர் கலந்து கொள்ளவில்லை என்பதற்கு படங்கள் ஆதாரம்.






No comments:

Post a Comment