ஆஸ்திரியாவில் முதல் பாலியல் கல்விப் பள்ளி
ஸ்வீடனைச் சேர்ந்த ஆசிரியை எல்வா-மரியா தாம்ஸன் என்பவர் பாலியல் கல்வியை கற்றுக் கொடுப்பதற்காகவே உலகின் முதல் சர்வதேச பள்ளியை திறந்துள்ளார். ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் இந்த பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இதில் பாடம் கற்க ஒரு பருவத்துக்கு 1400 பவுண்டுகள்.
உலகின் முதல் பள்ளியான இந்த பள்ளியில் 16 வயதுக்கு மேற்பட்ட யாரும் சேரத் தகுதி உடையவர்கள் என பள்ளித் தலைமை ஆசிரியர் எல்வா-மரியா தாம்ஸன் தெரிவித்தார்.
இந்த பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தின்படி பல படுக்கைகள் கொண்ட தூங்கும் அறையில் மாணவர்கள் தங்க வேண்டும். அங்கு அவர்களுக்கு ஹோம்வொர்க் செய்வது எப்படி என்று பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் முடிவில் பாலியல் கல்வியில் தகுதிபெற்றதற்கான சான்றிதழ் அவர்களுக்கு தரப்படும்.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், எங்களது அடிப்படைக் கல்வி தியரி மட்டும் அல்ல. மிகவும் பிராக்டிகலானதும்கூட. சிறந்த காதலராவது எப்படி என்பதுதான் இதில் முதன்மையானது.
பாலியல் உறவுக்கான நிலைகள், அன்பை வெளிப்படுத்தும் சூட்சுமங்கள், உடலியல் அம்சங்கள் ஆகியவற்றை நாங்கள் கற்றுக் கொடுக்க உள்ளோம் என்றார்.
இந்த பள்ளி சிறந்த வெற்றியைப் பெறும் என பள்ளியின் செய்தித்தொடர்பாளர் மெலோடி கிர்ஸ்க் நம்பிக்கை தெரிவித்தார்.
எனினும் இந்த பள்ளி தொடங்குவது ஆஸ்திரியாவில் ஏற்கனவே பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஸெக்ஸ் என்பது மறைத்து ஒளித்துக் கற்று கொள்ள வேண்டிய விஷயமல்ல என்று தான் கருவதாக அந்த ஆசிரியை தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment