தேசத்தின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் நாட்டு வீரர்கள் சார்பாக நீங்களும் ஒன்றுசேருங்கள்.
சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நாடளாவிய ரீதியல் நடாத்தும் செலாவணியை வென்ற நாட்டு வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவை நாளை 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அம்பாரை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் காலை 07.00மணி தொடக்கம் மாலை 06.00மணி வரையும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வெளியுறவுகள் முகாமையாளர் ஐ.எல்.எச்.ஜெமீல் தெரிவித்தார்.
சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அம்பாரை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று சனிக்கிழமை காலை 10.30க்கு கல்முனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக காரியாலயத்தில் இடம்பெற்ற போதே மேற்படி கூறினார்.
'தேசத்தின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் நாட்டு வீரர்கள் சார்பாக நீங்களும் ஒன்றுசேருங்கள்' என்ற கருப்பொருளுடன் மரதன் ஓட்டம், சைக்கிள் ஓட்டம், சர்வமத யாத்திரை, பாத ரத யாத்திரை, நடமாடும் சேவை, ஓவியப்போட்டி என்பனவற்றுடன், அம்பாரை மாவட்டத்தில் வெளிநாடு சென்றுள்ளவர்களின் சுமார் 119 ஐந்தாம் தரம் சித்தியடைந்தவர்களுக்கும், க.பொ.த சாதாரணதரம் மற்றும் உயர்தரம் சித்தியடைந்த பிள்ளைகளுக்கும் புலமைப்பரிசில் வழங்கும் வைபவமும், பரிசளிப்பு விழாவும் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
இதன்போது கல்முனை பயிற்சி நிலையத்தில் பயிற்சியை முடித்த இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதழும் அவர்களின் பெற்றோர்களுக்கு 2012ம் ஆண்டிற்கான கலண்டரும் வழங்கிவைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment