Sunday, December 18, 2011

வவுனியாவிலும் காக்கைதீவிலும் இரு கொலைகள்.

மோதரை காக்கைத்தீவு பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் இன்று (18) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். இலங்கைக்கு தமிழ் திரைப்படங்களை கொள்வனவு செய்யும் 53 வயதுடை வேலுப்பிள்ளை அந்தோனிராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் எவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்த தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். இந்த சம்பவம் தொடர்பில் மோதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேநேரம் வவுனியா - மகாரம்பைக்குளம் பிரதேச விட்டுத் தொகுதியில் நபர் ஒருவர் பொல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று மாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.

தனிப்பட்ட முறுகல் காரணமாக மூன்று பேர் இணைந்து ஒருவரை பொல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் 32 வயதுடைய சின்னன் திருச்செல்வம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

கொலை சந்தேகநபர்கள் மூவரையும் வவுனியா பொலிஸார் அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment