மதுபான உலக சக்ரவர்த்தியான விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா. இவர் இப்போது வியட்நாமில் உள்ளார். உயிரோடு இருந்த நாக பாம்பை விலைக்கு வாங்கிய அவர், அதை கசாப்பு கடையில் கொடுத்து துண்டாக நறுக்கிய போது, துடித்து கொண்டிருந்த அதன் இருதயத்தை எடுத்து சாப்பிட்டுள்ளார். பின்னர், அதன் ரத்தத்தை கோக்குடன் கலந்து குடித்துள்ளார்.
இது குறித்து அவர் டிவிட்டரில் கூறுகையில், நான் துடித்து கொண்டிருந்த பாம்பின் இருதயத்தை சாப்பிட்டேன். அதன் ரத்தத்தை கோக்குடன் கலந்து குடித்து விட்டேன். கோக்குடன் பாம்பின் ரத்தத்தை கலந்து குடித்தபோது அதன் ருசி வேறுமாதிரியாக இருந்தது. பாம்பின் இருதயத்தை சாப்பிட்ட போது, மீன்கறியை சாப்பிடுவது போல் ருசியாக இருந்தது. நான் எந்த நாட்டுக்கு சென்றாலும், அந்த நாட்டில் கிடைக்கும் புதிய ரக உணவு வகையை சாப்பிடுவது எனது வாடிக்கை. அதேபோல், கடந்த ஆண்டு தென்கொரியாவுக்கு சென்றிருந்த போது நாய் மாமிசத்தை ருசி பார்த்தேன்’ என்று டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். சித்தார்த் மல்லையா பாம்பு மாமிசத்தை சாப்பிட்டுள்ள தகவலை டிவிட்டரில் படித்த பலர், கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment