வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மொழி மூலம் பணியாற்றக்கூடிய 350 பொலிஸ் கான்ஸ்டபிள்களை நியமிக்க உள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழி மூலம் சிறப்பாக பணியாற்றக்கூடிய ஆற்றலுள்ள தமிழ் , முஸ்லிம் , சிங்களம் உட்பட எந்தவொரு இனத்தை சேர்ந்தவருக்கும் இதற்காக விண்ணப்பிக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இப்பிரதேசங்களில் வசிக்கக்கூடிய தமிழ் பேசும் மக்கள் தமது தேவைகளுக்காக பொலிஸ் நிலையம் சென்று அவர்களது மொழிகளிலேயே தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காகவே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment