நுவரெலியாவில் பொது போக்குவரத்து சேவையை செயற்திறனுடன் முன்னெடுக்க, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இலங்கை போக்குவரத்து சபை மற்றும் புகையிரத சேவையின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு, இப்பிரதேசத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நுவரெலிய மாவட்டத்தின் பொது போக்குவரத்து சேவையை செயற்திறனுடன் முன்னெடுக்க, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் புகையிரத சேவையில் காணப்படும் பதவி வெற்றிடங்கள் தடையாக, அமைந்துள்ளன. சகல வெற்றிடங்களும் துரிதமாக நிரப்பப்படவுள்ளன.
இதற்கமைய, இவ்வெற்றிடங்களுக்கென நுவரெலிய பிரதேசத்தில் வேலையற்ற இளைஞா யுவதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் குமார வெல்கம தலைமையில், போக்குவரத்து அமைச்சில் இவர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன. இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் எம்.டி. பந்துசேன, புகையிரத பொது முகாமையாளர் பி.ஏ.பீ. ஆரியரட்ன உள்ளிட்டோர், இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment