அவதானம்! அவதானம்! வேகமாக பரவும் மஞ்சள் காமாலை!
வரகாபொலை மற்றும் கரவனெல்ல பகுதிகளில் மஞ்சள் காமாலை நோய், பரவி வருவதாக, சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். அவதானமாக செயற்படுமாறு, பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த மஞ்சள் காமாலை நோய் தொற்றி கரவனெல்ல வைத்தியசாலையில் மாத்திரம் 10 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக, மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
கரவனெல்ல, வரகாபொலை, லெவங்கம ஆகிய பகுதிகளில், நோய் கூடுதலாக பரவி வருவதாக, சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
சப்ரகமுவ மாகாண கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கரவனெல்ல வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரி, இதனை தெரிவித்துள்ளார். தமது வைத்தியசாலையின் மலசலகூட தொகுதி, மிக மோசமாக காணப்படுவதனால், நோய் பரவும் அச்சுறுத்தல் தீவிரமடைந்துள்ளதாக, கரவனெல்ல வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனை கவனத்திற்கொண்ட, சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், வைத்தியசாலையின் மலசலகூட தொகுதியை உடன் திருத்தியமைப்பதற்கு, நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணித்துள்ளார்.
0 comments :
Post a Comment