ஜே.வி.பியின் தொழிற்சங்கங்கள் பிளவுபடும் அபாயம்
ஜே.வி.பியின் தலைமைத்துவம் 9 தொழிற்சங்க தலைவர்களை பதவியில் இருந்து அகற்றியுள்ளமையால், தொழிற்சங்கங்களுக்கு இடையில் பிளவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சிக்கு எதிராகச் செயற்பட்டார்கள் என்ற காரணத்தை காட்டியே இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (04.12.2011) விலக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார சேவைகள், அனைத்து நிறுவன தொழிற்சங்கம், ஆசிரியர் தொழிற்சங்கம், மின்சார சபை தொழிற்சங்கம், போக்குவரத்துத்துறை தொழிற்சங்கம், உள்ளுராட்சி திணைக்கங்களுக்கான தொழிற்சங்கம் போன்றவற்றின் தலைவர்களே தமது பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கடந்தஞாயிற்றுக்கிழமை கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்த, பதவிவிலக்கப்பட்ட சுகாதார சேவைகளின் ஜே.வி.பியின் தொழிற்சங்க தலைவராக இருந்த வைத்திய கலாநிதி ரணசிங்க, கட்சியினால் தமக்கு நேர்ந்த நீதியற்ற தன்மையை வெளிப்படுத்தப்போவதாக எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே அரசியல் கட்சி என்ற அடிப்படையில் ஜே.வி.பி இரண்டாக பிளவுப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment