எதிர்வரும் திங்கட் கிழமை12 ஆம் திகதி க. பொ. த. சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகிறது.
திங்கற்கிழமை ஆரம்பமாகபோகும் க. பொ. த. சாதாரண தர பரீட்சையில் 5 இலட்சத்து 31 ஆயிரம் மாணவர்கள் தோற்றவிருப்பதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார் .
இந்த ஆண்டுக்கான க. பொ. த. சா/தரப் பரீட்சையில் கடந்த காலங்களை விடக் கூடுதலான மாணவர்கள் இம்முறை தோற்றுவதாகத் அவர் தெரிவித்தார்.
இம்முறை நடைபெறும் பரீட்சையில் பாடசாலைப் பரீட்சார்த்திகளாக 3 இலட்சத்து 85 ஆயிரம் பேரும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக ஒரு இலட்சத்து 46 ஆயிரம் பேரும் தோற்றவுள்ளனர். கடந்த வருடத்தைவிட இவ்வருடம் 22 ஆயிரத்து 911 பரீட்சார்த்திகள் மேலதிகமாகத் தோற்றுகின்றனர்.இதற்காக நாடு முழுவதும் 3 ஆயிரத்து 920 மத்திய நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment