வீடுகளில் வயதான பெண்கள் தனியாக இருப்பின் அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளிலும் வயது முதிர்ந்தவர்கள் வசிக்கும் வீடுகளிற்குள் புகுந்து அவர்களை படுகொலை செய்து பொருட்களை கொள்ளையிடும் குற்றச்செயல்கள் இடம் பெறுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதுவரை நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் இவ்வாறான 03 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோர் மற்றும் அயலில் வயதானவர்கள் தனி வீடுகளில் வசிப்பார்களாயின் அவர்கள் பாதுகாப்பு தொடர்பில் அதிக அக்கறையுடன் இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment