அரசாங்கம் நிருவகிக்கும் ஊடக நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது அப்பட்டமான பொய்யாகும். ரூபவாஹினி சுயாதீன தொலைக்காட்சி லேக்ஹவுஸ் மற்றும் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் என்பன கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இலாபத்திலேயே இயங்கி வருகின்றன என்று தகவல் ஊடகத் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சபையில் தெரிவித்தார்.
தகவல் ஊடகத்துறை அமைச்சு மீதான குழு நிலை விவாதம் நேற்று சபையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அங்கு விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசியபதே அவர் மேற்சொன்னவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சபையில் மேலும்அங்கு கூறியதாவது,
சுயாதீன தொலைக்காட்சி இந்த வருடத்தில் 501.3 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளது. ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், திரைப்படக் கூட்டுத்தாபனம் எனவும் சிறப்பாக இயங்குகின்றன.
ரூபவாஹினி கூட்டுத்தாபனம் 141 மில்லியன் ரூபா இலாபமிட்டியுள்ளது. லேக்ஹவுஸ் நிறுவனமும் இதனை விட கூடுதல் இலாபம் பெற்றிருக்க முடியும். ஆயினும் மங்கள சமரவீரவுடைய காலப்பகுதியில் அதிகமான ஊழியர்கள் இணைக்கப்பட்டதால் அங்கு மேலதிக ஊழியர்கள் காணப்படுகின்றனர்.
No comments:
Post a Comment