ஜேர்மன் தமிழாலயத் தலைமை கைமாறுகின்றது.
ஜேர்மன் தமிழாலயத் தலைமையில் திடீர் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது. தற்போது தலைவராகவுள்ள நாகலிங்கம் என்பவருக்கு பதிலாக லோகன் என்பவர் நியமிக்கப்படவுள்ளதாக அறியக் கிடைக்கின்றது. ஸ்ருட்காட் பிரதேசத்தில் வசித்துவரும் புலிவாலான லோகன் தமிழாலயத்தின் நெடுநாள் செயற்பாட்டாளர் ஆவர்.
புலிகளின் பினாமி அமைப்பான தமிழாலயம் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரக் கல்வி என்ற பெயரில் புலிப்பாசிசத்திற்கு துணைநிற்கின்றதோர் அமைப்பாகும்.
இவ்வமைப்பானது அங்கு மொழி மற்றும் கலை கற்க வருகின்ற மாணவர்கள் மத்தியில் சூசகமாக புலிகளின் கருத்துக்களை திணித்துவருவதுடன் , புலிகள் பாசிஸ்டுக்கள் என்ற உண்மையை மறைத்து மக்களுக்காக போராடும் ஓர் விடுதலை அமைப்பு என்றுவேறு கற்றுக்கொடுக்கின்றனர்.
புலிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு துணைபோகும்; இவர்கள் கல்வி பயில வரும் மாணவர்களையும் பெற்றோரையும் புலிகளின் மாவீரர் தினம் , மற்றும் வீதிமறிப்பு போராட்டம் போன்ற செயற்பாடுகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
மேலும் தற்போது தலைவராக நியமிக்கப்படவுள்ள லோகன் ஜேர்மனியில் இயங்கும் பல்வேறு இளையோர் அமைப்புக்களைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட இளைஞர்களை புலிளியக்கத்துடன் இணையுமாறு வன்னிக்கு அனுப்பி வைத்தவராகும். இவ்வாறு இவரால் அனுப்பிவைக்கப்பட்ட இளைஞர்களில் ஐங்கரன் என்ற இளைஞன் அங்கு உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment