லண்டனில் சிங்கள இளைஞன் குத்திக்கொலை. இனவாத நோக்கத்திலான கொலையா?
லண்டன் லிவர்போல் பிரதேசத்தில் இயங்கிவந்த வர்தக நிலையம் ஒன்றில் கடமைபுரிந்த இளைஞன் ஒருவன் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கறுப்பு உடையுடன் முகமூடி அணிந்து சென்ற நபர் ஒருவரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
லிவர்பூல், ஹேட்டன் பகுதியில் உள்ள கிங்ஸ்வே என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரான்லி நியூஸ் அன் வைன்ஸ் என்ற செய்தி முகவர் நிலையத்தில் பணியாற்றிய இளைஞரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நிறுவனத்தின் உரிமையாளரான டாக்டர் குணபால வெல்கன்கம இது தொடர்பாக கூறுகையில், இத்தாக்குதல் கொள்ளையிடும் நோக்கத்துடன் இடம்பெற்ற ஒன்றல்ல எனவும் , அங்கிருந்து எந்தவொரு பொருளும் திருடப்பட்டிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் , கொலையின் பின்னணியில் இனவெறியைத் தவிர தான் வேறெந்தக்காரணத்தையும் காணவில்லை என தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட இளைஞன் பிரித்தானியவினுள் நுழைந்து 1 வருடங்களே எனவும் குறிப்பிட்ட நிறுவனத்தில் கடந்த சில மா தங்களாகவே தொழிலுக்கு வந்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
30 வயதான மரணமடைந்த நபருக்கு 6, 3 வயதுகளில் இரு குழந்தைகள் உண்டு என தெரிவிக்கும் நிறுவன உரிமையாளர் இளைஞன் கீழ்படிவும் அன்பும் மிகுந்த இளைஞன் என வர்ணிக்கின்றார்.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் Knowsley, பிரதேசத்திற்கான தளபதி பிரதம அத்தியட்சகர் Darren Martland அவர்கள், இக்கொலையானது கொள்ளை அன்றில் இனவெறி நோக்கம் கொண்டதாக இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இதுவொரு கொடூரமான சம்பவம் எனத் தெரிவித்துள்ள அவர், இதன் பின்னணி தொடர்பாக தகவல்களை பொது மக்களிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தகவல்களை வழங்கவிரும்புவோர் கீழ்காணும் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தமுடியும். தகவல்கள் மிகவும் ரகசியமாக பேணப்படும் எனவும் பெயர்கள் வெளியிடப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Anyone with any information is asked to call Merseyside Police on 0151 777 6565, or 101, or Crimestoppers anonymously, on 0800 555 111.
Read More http://www.liverpoolecho.co.uk/liverpool-news/local-news/2011/11/30/murder-investigation-launched-after-man-is-stabbed-to-death-in-huyton-100252-29867143/#ixzz1fI6Ku2Ck
...............................
0 comments :
Post a Comment