ஐதேகவில் ஜனநாயகம் காணப்படின் மக்கள் கல்லை கையில் எடுக்க வேண்டிவராது
எதிர்கட்சியில் தற்போது ஜனநாயகம் இல்லை எனவும் அழிவே அங்கு செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் மைத்திரி குணரட்ன தெரிவித்துள்ளார். எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆட்சி அதிகாரம் கிடைத்தால் நாட்டில் தற்போது காணப்படுவதைவிட அதிகம் அழிவை நோக்கிய வேலைத்திட்டங்களை கண்டுகொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சிக்குள் ஜனநாயகம் காணப்பட்டால் மக்கள் கல், கட்டைகளை கையில் எடுக்க மாட்டார்கள் என இன்று (31) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களை தெரிவு செய்ய அண்மையில் இடம்பெற்ற தேர்தல் நியாயமானதல்ல எனவும் அதன் பொறுப்பை கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் மைத்திரி குணரட்ன குறிப்பிட்டார்.
அத்துடன் ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் நடவடிக்கை எடுத்தால் அதற்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டி போராடவுள்ளதாகவும் மைத்திரி குணரட்ன தெரிவித்தார்.
0 comments :
Post a Comment