இந்திய அரசாங்கம் இக்கைத்தொழில் பேட்டையின் அபிவிருத்திக்கென, 92 மில்லியன் ரூபாவை உதவியாக வழங்கவுள்ளது. இது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு, இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இடம்பெற்றது. அமைச்சர்களான பெசில் ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே கான்தா உள்ளிட்டோரின் பங்கேற்புடன், உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
கைத்தொழில் பேட்டையின் சுமார் 25 ஏக்கர் பிரதேசத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் விருத்தி செய்யப்படும். இதன் மூலம் நேரடி மற்றும் மறைமுகமாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புகள் உருவாகும். இங்கு ஆடை உற்பத்தி, தோல் பொருள் உற்பத்தி, பிளாஸ்டிக் மற்றும் விவசாய உற்பத்தி ஆகிய துறைகள் மீது விசேட கவனம் செலுத்தப்படும். இதற்கென. தொழில்நுட்ப அறிவு மற்றும் செயற்திட்ட முகாமைத்துவ சேவைகள், ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினால் வழங்கப்படும். தேவையான அடிப்படை திட்டங்களை வகுக்கும் பணிகள், பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment