Wednesday, December 14, 2011

மண்முனைப்பற்று பிரதேச கல்வி அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல்

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மண்முனைப்பற்று பிரதேச கல்வி அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.பவளகாந்தன் தலைமையில் ஆரையம்பதி மகா வித்தியாலயத்தில் நடாத்தப்பட்டது.

மண்முனைப்பற்று கோட்டக்கல்வி பிரதேசத்தில் ஆரையம்பதி, தாளங்குடா, கிரான்குளம், புதுக்குடியிருப்பு, மாவிலங்குத்துறை அடங்கலாக பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி தொடர்பாகவே இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

மண்முனைப்பற்று பிரதேசத்தில் கடந்த 5 வருடங்களாக கல்வித்துறை பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.> இந்நிலையினை மாற்றி எதிர்வரும் காலங்களில் எவ்வாறு பரீட்சை பெறுபேறுகளை அதிகரிக்க செய்வதன் மூலம் பல்கலைக்கழகத்திற்கான அனுமதியை அதிகரிக்கச்செய்யலாம் என்பது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது.

உட்கட்டுமான அபிவிருத்திகளை கடந்து கல்வி அபிவிருத்தியினை மையாமாகக்கெண்டே ஆராயப்பட வேண்டும் என கோட்டக்கல்விப் பணிப்பாளர் கந்தசாமி அவர்கள் இங்கு குறிப்பிட்டார்.

மண்முனைப்பற்று பிரதேசத்தில் கடந்த 5 வருடங்களாக பாடசாலை மட்டக் கல்வி, கலாசாரம், விளையாட்டு துறை, ஏனைய சமூக துறைகளில்; அடுத்த 2 வருடங்களில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் இங்கு கருத்து தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து, எதிர்வரும் 22ம் திகதி கல்வி ஆர்வளர்கள் திட்டமிடல் பணிப்பாளர், வலயக் பணிப்பாளர், பாடசாலை அதிபர்கள் உள்ளடங்கலாக திட்டமிடல் செயலமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com