இந்தியாவில் பெங்களுர் பொலிஸார் சட்டவிரோத ஆயுத கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்துள்ளனர். இவர்களுள் எல்ரிரிஈ முகவர் ஒருவரும் அடங்குகின்றார். 10 வருடங்களுக்கு முன்னர் 5 நட்சத்திர ஹோட்டலில் பயண முகவராக கடமையாற்றிய ஒருவரை கொலை செய்த சந்தேக நபரும் இவர்களுள் அடங்குகின்றார்.
மாநிலத்தின் வடகிழக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் சிறிய ரக துப்பாக்கியொன்று, 2 உள்ளுர் துப்பாக்கிகள், 9 மில்லி மீட்டர் மற்றும் 7.65 மில்லி மீட்;டர் வீச்சை கொண்டுள்ள நவீன பகுதி தன்னியக்க துப்பாக்கிகள், 27 சுற்று ரவைகள், கூரிய ஆயுதங்கள் மற்றும் இதற ஆயுதங்களும் குறித்த கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்டன. ஹோட்டல் பயண முகவர் கொலை வழக்கில் முக்கிய சூத்திரதாரியான 38 வயதுடைய பங்காச் குமார் ரோய் என்பவர் உடகன் மாநிலத்தின் அஸ்டா போஜி கொலனியை சேர்ந்தவர் என விசாரணைகளிலிருந்து தெரிய வருகிறது. மாநிலத்தின் வர்த்தக பகுதியிலுள்ள வீரபுல்லா வீதியை சேர்ந்த 44 வயதுடைய ஸ்ரீனிவாஸ் ஒரு எல்ரிரிஈ உறுப்பினராவார். இந்த கும்பலில் உள்ள ஏனைய அங்கத்தவர்களாக மூர்த்தி எனும் நரசிம்ம மூர்த்தி, பிக்காலாசிவா எனும் ஜி. சிவகுமார், சிவா எனும் எஸ்.சிவகுமார், ஹரி எனும் எஸ்.ஹரிஸ்குமார் ஆகியோரும் அடங்குகின்றனர்.
சில வருடங்களுக்கு முன்னர் பெங்களுர் பிரேஸர் சந்தியில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் ஸ்ரீனிவாஸ் கைது செய்யப்பட்டார். தமிழ் நாட்டில் எல்ரிரிஈ யினருக்கு ஆயுதங்களை விநியோகித்த குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டார். மூர்த்தி எனும் நரசிம்ம மூர்த்தி 5 கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவரென தெரிய வந்துள்ளதாக, மாநிலத்தின் வடகிழக்கு பிரிவு பிரதி பொலிஸ் ஆணையாளர் பி.ஆர். ரவிகாந்த் கௌடா த ஹிந்து பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
ஆயுதக்கடத்தல் கும்பலின் முக்கிய புள்ளியாக ரோய் கருதப்படுகின்றார். இவர் பூனே நகரின் முகாமைத்துவ ஆலோசகராக முன்னர் கடமையாற்றிய அப்பரிஜித் விஸ்வநாத் பஸாக் என்பவரின் மெய்ப்பாதுகாவலராக கடமையாற்றியுள்ளார் .2001 மே மாதம் அசோக் எனும் 5 நட்சத்திர ஹோட்டலில் பயண முகவர் அதிகாரியாக கடமையாற்றிய 50 வயது நிரம்பிய கே.ஆர் ஆனந்த் பத்மநாபா ஆச்சிரியா என்பவரை ரோய் கொலை செய்துள்ளார்.
No comments:
Post a Comment