நியுஸிலாந்தில் வேலை பெற்று தருவதாக கூறி விற்பனை உதவியாளர் ஒருவரை ஏமாற்றி 4 இலட்சத்து 66 ஆயிரத்து 950ரூபா பணத்தை பெற்று சிங்கப்பூரில் கைவிட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஒருவரை நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் 25 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் 5 இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
கொச்சிக்கடை - தளுவகொட்டுவ பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவராவார்.
தனியார் நிறுவனமொன்றில் உதவி விற்பனையாளராக பணியாற்றிய பிரசாத் நிமந்த பெரேரா என்பவரே இந்த வழக்கின் முறைப்பாட்டாளராவார்.
சந்தேக நபர் வழக்கின் முறைப்பாட்டாளரை நியுஸிலாந்தில் உள்ள பழத் தயாரிப்பு நிறுவனமொன்றில் வேலை பெற்று தருவதாக வாக்குறுதி; அளித்து ஏமாற்றி, அவரிடமிருந்து 4 இலட்சத்து 66 அயிரத்து 950 ரூபா பணத்தை பெற்று பின்னர் சிங்கப்பூரில் (முறைப்பாட்டாளரை) கைவிட்டு சென்றுள்ளதாக நீர்கொழும்பு விசேட மோசடி விசாரணைப்பிரிவு பொலிஸார் நீதிமன்றில் சந்தேக நபருக்கெதிராக செய்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment