மாலைதீவில் கைவரிசையை நம்மவர்களுக்கு சிறைத்தண்டனை!
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மதுபான வகைகளை விற்பனை செய்த 3 இலங்கையர்களுக்கு எதிராக மாலைத்தீவு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தரமற்ற மதுபான வகைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தமைக்காக அண்மையில் 3 இலங்கையர்களும், சிங்கப்பூர் பிரஜையொருவரும் மலைத்தீவு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர். 168 மதுபான போத்தல்களும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் 3 இலங்கை பிரஜைகளுக்கும் மாலைத்தீவு நீதிமன்றம் ஒரு வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
0 comments :
Post a Comment