Wednesday, December 14, 2011

சீன பாதுகாப்பு துறை பிரதி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன அரசின் பாதுகாப்பு துறை பிரதி தலைவர் ஜெனரல் மாஷியா ஓஷியன் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை கட்டியெழுப்புவது தொடர்பாக இச்சத்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டது. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, முப்படைகளின் பிரதாணி எயார் ச்சீப் மார்ஸல் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

இதே வேளை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன அரசின் பாதுகாப்பு துறை பிரதி தலைவர் ஜெனரல் மாஷியா ஒஷியன் கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் சோமதிலக்க திசாநாயக்கவையும் சந்தித்துள்ளார். கடற்படை தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. சீன அரசின் பாதுகாப்பு துறை பிரதி தலைவரை கௌரவிக்கும் முகமாக மரியாதை வேட்டுக்களும்; தீர்க்கப்பட்டன. இரு நாட்டு கடற்படை உறவுகளை கட்டியெழுப்புவது தொடர்பாக இச்சந்திப்பின் போது ஆராயப்பட்டது.


No comments:

Post a Comment