Sunday, December 18, 2011

எகிப்து தலைநகர் கைரோவில் இரண்டாவது தினமாகவும், வன்செயல்கள் தீவிரமடைந்துள்ளன.

நேற்று இடம்பெற்ற வன் செயல்களினால் 8 பேர் கொல்லப்பட்டனர். எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள், பொலிஸார் மீது தாக்குதல்களை மேற்கொண்டதுடன், வீதியின் இரு மருங்கிலும் உள்ள கட்டிடங்களையும் தீயிட்டு கொழுத்தியதாக, அறிவிக்கப்படுகிறது. இவர்களை கலைப்பதற்கு, கண்ணிர் புகைப்பிரயோகம் மற்றும் நீர்பிய்ச்சி அடிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் தொடக்கம் எகிப்தில் பாதுகாப்பு தரப்பினர் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல்களினால் 40 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது, அந்நாட்டு பாராளுமன்ற கட்டிடத் தொகுதி மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி, சேதப்படுத்தியதாகவும், அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment