கடுகதிபாதையில் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை
தெற்கு அதிவேக பாதையில் வேக கட்டுப்பாட்டை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட வரையறையை மீறி வாகனத்தை செலுத்துவோரை சட்டத்தின் பிடியில் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டத்தை இன்று முதல் செயல்படுத்த அதிவேக பாதை பொலிஸ் பிரிவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக விசேட கட்டுப்பாட்டு கருவிகளும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
சாரதிகள் வேக கட்டுப்பாட்ட மீறியதனால் அண்மையில் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டன. சமிக்கை விளக்குகள் மற்றும் வேக கட்டுப்பாடு தொடர்பாக சாரதிகள் உரிய அவதானத்தை செலுத்த வேண்டுமென போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
இதே வேளை இப்பாதையில் தனியார் பஸ்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக அரசாங்கம் அவதானத்தை செலுத்தியுள்ளது.
0 comments :
Post a Comment