சரத் பொன்சேகாவை விடுவிக்க ஒபாமாவால் முடியாது, நானே அதைச் செய்யவேண்டும்.
சரத் பொன்சேக்காவிற்கு விடுதலை தேவைப்பட்டால் ஒபாமாவிடம் சென்று பயனில்லை இலங்கை ஜனாதிபதியினால் மாத்திரமே விடுதலையை வழங்க முடியுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும் அதனை புரிவதற்கும் முறையான வழி வகைகள் உண்டு. கோரிக்கைகள் விடுப்பதற்கும் ஒழுக்க ரீதியிலான திட்டங்கள் அவசியம என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் ஊடக நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்து பேசுகையில்,
ஒரு இலட்சம் கையொப்பம் அல்ல 10 இலட்சம் கையொப்பத்தை எடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடம் சமர்ப்பித்தாலும் ஒபாமா மீண்டும் அதனை என்னிடமே ஒப்படைக்க வேண்டும்.
அதனால் மன்னிப்பு வழங்கும் தீர்மானம் இலங்கை ஜனாதிபதிக்கன்றி சர்வதேச தலைவர்களுக்கு இல்லையென்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
பொன்சேக்காவை விடுதலை செய்வதற்கு அந்த தரப்பினர் பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றார்களா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி கொலைகாரர்கள், மோசடிகாரர்கள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களை புரிந்து சிறை வாசம் அனுபவித்து வருபவர்களை விடுதலை செய்து கொள்வதற்கு பலர் தன்னிடம் வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். எனினும் குற்றவாளியொருவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது தனது தனித்தீர்மானத்தினால் மேற்கொள்ள முடியாதென்றும் அவ்வாறு செய்தால் அதுவொரு சர்வாதிகார முடிவு என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
1 comments :
The world history is the lesson for everyone in the future. Sadam Husain, Mobarac, Kadaabi and so...
No one can escape from the God's punisment.
Post a Comment