பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையை வழங்கும் வாகனங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இந்த வருடத்தினுள் நிறைவு செய்யப்படவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தற்போது பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால். இந்த விடுமுறைக்காலத்தில் பாடசாலை வாகனங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அதன் தலைவர் அனோமா பொன்சோ குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment