அமெரிக்காவை சேர்ந்தவன் கெவின் லன்ஸ்மான் (14). இவன் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்று இருந்தான். இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அவன் அல்கொய்தா தீவிரவாதிகளால் கடத்தப்பட்டான். அவர்களிடம் பணய கைதியாக இருந்தான். அவனை பிலிப்பைன்ஸ் நாட்டு போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், பாசிலான் மாகாணத்தில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் உள்ள ஒரு நீரோடையில் இவனை குளிக்க தீவிரவாதிகள் அழைத்து சென்றனர். அப்போது அவர்களிடம் இருந்து அவன் தப்பினான். வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்துக்குள் புகுந்து அவனை அப்பகுதி மக்கள் பாதுகாத்து வந்தனர்.
தீவிரவாதிகள் தாக்கியதால் உடலில் காயத்துடன் இருந்த அவன் ஷாம்போங்கா நகர மேயரிடம் ஒப்படைக்கப்பட்டான். இதை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றான். விரைவில் அவன் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான அமெரிக்க தூதர் ஹாரி தாமசிடம் ஒப்படைக்கப்படுகிறான்.
No comments:
Post a Comment