கல்லூரி அபிவிருத்திக்காக நிதி சேகரிக்கும் பழைய மாணவர்கள்.
நீர்கொழும்பு சென் மேரிஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்திற்கு 90 வருடங்கள் பூர்த்தியடைந்ததையிட்டு இன்று முற்பகல் 10 மணியளவில் நீர்கொழும்பு சென் மேரிஸ் கல்லூரி ஜுப்லி மண்டபத்தில் விசேட நிகழ்வொன்று இடம் பெற்றது.
இன்னும் 10 வருட காலத்தில் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்திற்கு 100 வருடங்கள் நிறைவடைவதையிட்டு அந்தக் காலப்பகுதிக்குள் கல்லூரியின் அபிவிருத்தி திட்டங்களுக்காக நிதி திரட்டும் வேலைத்திட்டமும் இந்த நிகழ்வில் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அருட்தந்தை செஸ்டர்ஸ் குருகுலசூரிய நிதி திரட்டும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
கல்லூரி அதிபர் மெக்ஸல் பெர்னாந்து உட்பட பழைய மாணவர் சங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்த கொண்டனர். அத்துடன் பழைய மாணவர்கள் சிலர் இத்திட்டத்திற்கு நிதியினை அன்பளிப்பு செய்தனர்.
இதேவேளை, சென் மேரிஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்திற்கு 90 வருடங்கள் நிறைவடைந்ததையிட்டு கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஆங்கில மொழி கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றோருக்கம் நிகழ்வில் பரிசில்கள் வழங்கப்பட்டன.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
0 comments :
Post a Comment