பொலன்னறுவை மாவட்டத்தில் கடும் மழை பராக்கிரம சமுத்திரத்தின் வான்கதவு திறப்பு
பராக்கிரம சமுத்திரத்தின் 10 கதவுகளும் 3 அங்குல உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை வலய நீர்ப்பாசன பொறியியலாளர் யூ.பி ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஒரு வான் கதவின் மூலம் வினாடிக்கு 300 கன அடி நீர் வெளியேறுவதாகவும் மகாவெலி கங்கையை பயன்படுத்துவோர் இது தொடர்பாக அவதானமாக இருக்கவும் பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்நீர்த்தேக்கத்தின் நீரின் அளவு ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து தொள்ளாயிரம் ஏக்கர் கன அடியை தாண்டியுள்ளது. இன்றும் தொடர்ந்து மழை பெய்யுமானால் ஏனைய நீர்த்தேககங்களின் வான் கதவுகளும் திறக்கப்படுமென பிராந்திய பொறியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மெதிரிகிரிய கௌடுல்ல நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் இந்நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
இதேவேளை,மின்னேரியா கிரிதலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. மழை தொடர்ந்தும் பெய்ததால் இந்நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடுவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி தெரிவித்தார்.
பொலன்னறுவையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பொலன்னறுவை மாவட்ட அலுவலகம் தயாராக இருப்பதாகவும் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment