இலங்கை அகதிகளுக்கான வீசா கொள்கைகளை இலகுப்படுத்துவதற்கு இந்தோனேசியா நடவடிக்கை எடுத்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த சட்டங்களை இலகுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மற்றும் பங்களாதேஷ் பிரஜைகளுக்கு தமது நாட்டில் பிரவேசிக்க வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் சட்டங்களை இலகுபடுத்தி கொடுப்பதற்காக இந்தோனேசிய அரசாங்கத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான வெளியுறவு பணிப்பாளர் றிஸாலி வில்மர் இதனை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இந்த சட்டங்கள் இலகுப்படுத்தப்பட்ட போதிலும் அந்நாட்டின் பிரதிநிதிகள் நிறுவனங்களின் அங்கீகாரம் இதற்கு தேவைப்படுவதாக அறிவிக்கப்படுகின்றது.
இந்தோனேசியா வீசா அனுமதியை கடுமையாக பேணி வரும் ஒரு நாடாகும். ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், மியன்மார், இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து சென்று அங்கு 3 ஆயிரம் அகதிகள் தங்கியுள்ளனர்.
இந்நிலைமையில் இந்தோனேசிய அரசாங்கம் அகதிகளுக்கு இந்தோனேசியாவில் பிரவேசிப்பதற்கான சட்டங்களை இலகுப்படுத்துவதே இந்த நாடுகளுக்கு பெரும் நிவாரணமாக அமையுமென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment