Wednesday, December 14, 2011

இரட்டை கோபுரம் இடிவது போன்ற வடிவத்தில் கட்டிடம்

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுரத்தை தீவிரவாதிகள் விமானத்தை மோதவிட்டு தகர்த்தனர். அப்போது கட்டிடம் தகர்ந்து புகை கிளம்பியது, விமானம் மோதும்போது கட்டிடம் எப்படி தோற்றம் அளித்ததோ அதே போன்ற வடிவில் தென் கொரியாவில் உள்ள சியோல் நகரில் கட்டிடம் ஒன்றை கட்ட உள்ளனர்.

இந்த கட்டிடத்தை நெதர்லாந்து நாட்டை சேர்ந்த எம்.வி. ஆர்.டி.வி என்ற கட்டிட நிறுவனம் வடிவமைத்து உள்ளது. கட்டித்தில் புகை தெரிவது போன்ற இடத்தில் இரு கட்டிடத்தையும் இணைத்து உள்ளனர். அதில் ஒட்டல், பூங்கா , நீச்சல் குளம் போன்றவை அமைக்கப்படுகிறது.

இந்த கட்டிடம் வடிவைமைப்புக்கு அமெரிக்கர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதற்காக கட்டிட வடிவமைப்பு நிறுவனம் மன்னிப்பு கேட்டு உள்ளது. ஆனாலும் திட்டமிட்டபடி கட்டிடம் கட்டப்படும் என்று கூறியுள்ளது. அடுத்தமாதம் கட்டிட பணி தொடங்குகிறது. 3 ஆண்டில் கட்டிடத்தை முடிக்க திட்டமிட்டு உள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com