எந்தவொரு மதகுருமாருக்கும் கட்சி அரசியல் பொருத்தமற்றது எனவும் அவர்கள் கட்சி அரசியலிலும் அரசியல் பிரச்சினைகளிலும் தம்மை ஈடுபடுத்த முடியாது எனவும் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் கர்டினால் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மறை மாவட்டத்திலிருந்து மதகுரு ஒருவருக்கு பொருத்தமற்ற விதத்தில் செயற்பட்டு கொண்டிருக்கும் அருட் தந்தை எஸ் ஜே. இமானுவெலின் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் இவர் மேலும் தெரிவித்தார்.
ஞானார்த்த பிரதீபய என்ற பத்திரிகைக்கு கருத்த தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர் மேலும் இலங்கையில் பிரிவினைவாதத்தை மீண்டும் ஏற்படுத்த முயன்றால் அதை அனுமதிக்க முடியாதெனவும் பிரிவினைவாதம், இனவா தம், சமய வாதத்தை கத்தோலிக்க சபை முற்றாக நிராகரிப்பதாகவும் தற்போது தேவைப்படுவது இன மத. பேதமில்லாமல் எல்லோரும் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களை அரசியல் தீர்வொன்றுக்கு இட்டுச்செல்வதினூடாக தமிழ் மக்களை வெளிநாட்டு சூழ்ச்சிகளிலிருந்து காப்பாற்றுவதாகும் என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment