புதிய அரசியல் முன்னணியொன்று உருவாக்கப்படும் என ஜே.வி.பி.யின் கிளர்ச்சிக்குழு அறிவித்துள்ளது. மக்கள் போராட்ட இயக்கம் என்ற பெயரில் புதிய அரசியல் முன்னணியொன்று உருவாக்கப்பட உள்ளதாக கிளர்ச்சிக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 13ம் திகதி ஜே.வி.பி கிளர்ச்சிக் குழுவின் முதலாவது ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெறவுள்ளது. கொழும்பு ஹைட் மைதானத்தில் இந்தப் பேரணி நடத்தப்படும் என கட்சியின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், புதிய அரசியல் முன்னணி ஒன்றை நிறுவிய பேதிலும், ஜே.வி.பி உறுப்பினர்களாக தொடர்ந்தும் செயற்பட போவதாகக் குறிப்பிட்டுள்ளனர். ஜே.வி.பி மத்திய செயற் குழுவின் அரைவாசிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தற்போது கிளர்ச்சிக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
இதேவேளை. ஜே.வி.பி கிளர்ச்சிக் குழு உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஜே.வி.பி செயற்குழு தீர்மானித்துள்ளது.
No comments:
Post a Comment