Thursday, December 1, 2011

பொலிஸ் பரிசோதகர் மீது சக பெண்பொலிஸ் அதிகாரி பாலியல் குற்றச்சாட்டு.

கண்டி பொலிஸ் விசேட குற்றத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது பாலியல் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது. தன்னுடன் கடமை புரியும் பெண் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிந்தார் என இவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இக்குற்றச்சாட்டின் அடிப்படையில் தான் எந்த நேரத்திலும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படலாம் என சந்தேகிக்கும் குறிப்பிட்ட பிரதம இன்ஸ்பெக்ட்ரர் கண்டி பிரதான நீதவான் உதய கரலியத்த முன்னிலையில் சரணடைந்ததனையடுத்து முன்பிணையினை பெற்றுக்கொண்டுள்ளார்.

இவரை 10000 ரொக்த்திலும் 1 லட்சம் சரீரப்பிணையிலும் நீதவான் விடுதலை செய்துள்ளார். .

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com