மேல் மாகாண தனியார் பஸ் ஊழியர்களிள் பஸ் பணிநிறுத்தம் கைவிடப்பட்டது
மேல் மாகாண தனியார் பஸ் ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் மேற்கொண்டு வந்த பணிநிறுத்தத்தை சற்று முன்னர் கைவிட்டுள்ளனர்.
தமது பிரச்சினைக்கு உரிய தீர்வினைப் பெற்றுத் தருவதாக அதிகாரிகள் அளித்த வாக்குறுதியை அடுத்தே இவர்கள் பணிநிறுத்தத்தை கைவிட்டுள்ளனர்.
.
நேற்று நள்ளிரவு முதல் மேல் மாகாணத்தில் இயங்கும் அனைத்து தனியார் பேருந்துகளும் சேவைப் புறக்கணிப்பை மேற்கொண்டனர்.
சட்ட விரோதமாக வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதி பத்திரம் ஒன்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த சேவைப் புறக்கணிப்பு இடம்பெற்றது.
நேற்றைய தினம் 14 மார்க்கங்களில் போக்குவரத்து சேவைகளில் இருந்து முற்றாக விலகியதாகவும், தற்போது அனைத்து மார்க்கங்களிலும் போக்குவரத்து சேவையிலிருந்து தனியார் பஸ் ஊழியர்கள் விலகியுள்ளதாகவும், இலங்கை தனியார் பஸ் ஊழியர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பு வெற்றியளித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சம்மேளனத்தின் செயலாளர் அன்ஜன் பிரியன்ஜி தெரிவித்துள்ளார்.
தனியார் பஸ் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ள நிலையிலேயே பணிநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.
0 comments :
Post a Comment