புலம்பெயர்ந்த யாழ்ப்பாணத்தவர்களுக்கு அதன் வரலாறு தெரியாதாம்!
வெளிநாடுகளில் வாழும் யாழ்ப்பாணத்தவர்களின் பிள்ளைகளுக்கு யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது என்பதும், யாழ்ப்பாணத்தின் வரலாறு தெரியாதவர்களாக இருப்பதாக யாழ்.பல்கலைக்கழக உபவேந்தர் போராசிரியர் வசந்தி அரசரெட்ணம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சியில் பங்களிப்புச் செய்த வரலாற்றுத்துறை மாணவர்களுக்கு யாழ்.பல்கலைக்கழக கைலாசபதியரங்கில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நாங்கள் என்ன செய்தாலும் அதை விமர்சிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் எனக்கூறியக் கொண்டு கழுதைக் கதை ஒன்றை மாணவர்களுக்கு சொல்லியிருந்தார்.
கழுதை மனிதனைச் சுமந்து செல்ல வேண்டும். மனிதன் கழுதையைச் சுமக்கச் செய்வதுதான் விமர்சனங்கள் என மாணவர்களுக்குப் புத்தி மதி கூறியுள்ளார்.
எந்த விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இல்லை. உங்கள் மனச்சாட்சிக்கு சரியாக நடந்தால் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
ஒவ்வொருவரும் சுயமதிப்பீடு செய்ய வேண்டும். அப்போதுதான் எங்களை நாங்கள் இனம் காணமுடியும்.
யாழ்ப்பாணத்தின் வரலாற்றுகளை கண்முன்னே காட்டி நிற்பவையாக யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சி அமைந்தது. இதனைப் புலம்பெயர் தமிழர்கள் பார்த்துப் பெருமபைப்பட்டார்கள் என்றார்.
இந்த பரிசளிப்பு நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் புஸ்பரெட்ணம், யாழ்.பல்கலைக்ககை கலைப்பீடாதிபதி ஞானக்குமரன், பேராசிரியர் சிவசாமி, யாழ்ப்பண பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment