Tuesday, December 20, 2011

த.தே.கூ விற்கு ஞனாம் பிறந்தது. ஊனமுற்ற புலிகளை விடுவிக்கட்டமாம்!

போரில் காயமுற்று ஊனமுற்ற நிலையில் தற்போது வெலிக்கடை, அனுராதபுரம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகளை அரசு விடுவிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்த் தேசக் கூட்டமைப்பின் சார்பில் இலங்கை நீதித்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான ஆளும் சிறிலங்க சுதந்திரக் கட்சிக் குழுவை சந்தித்துப் பேசிய போது இந்தக் கோரிக்கையை சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான குழு முன் வைத்துள்ளது.

இக்கோரிக்கை தொடர்பாக சட்ட மா அதிபர் திணைக்களத்துடன் பேசுவதாக அமைச்சர் ஹக்கீம் உறுதியளித்துள்ளார்.

போர் இறுதிக்கட்டத்தை அடைந்திதுந்தபோது புலிகள் ஊனமுற்ற புலி உறுப்பினர்களை கரும்புலிகளாக அனுப்பி வெடித்து சிதற வைத்திருந்தனர். மேலும் யுத்த முடிவில் புலிகளின் தலைவர்கள் சரணடைவதற்கு முன்னர் எஞ்சியிருந்த ஊனமுற்ற புலிகளை வாகனம் ஒன்றில் ஏற்றி அவ்வாகனத்தை குண்டு வைத்து தகர்த்தெறிந்தனர் என்பது யாவரும் அறிந்தது.

இவ்வாறு புலிகளிடமிருந்து அங்கவீனர்களை காப்பாற்ற முயலாத ததேகூ ற்கு தற்போது ஞானம் பிறந்துள்ளது என பலரும் ஆச்சரியப்பட்டுகின்றனர்.

1 comment:

  1. some or other they try to attract the people concern. Political philosophy entirely differes from
    commercial political.What does the commercial politics needs ? a kind verbal attractive words .We have heard enough mouthy expressions.

    ReplyDelete