சபாநாயகர் வெற்றிக்கிண்ணத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் அணிக்கும் அமைச்சர்கள் அணிக்கும் இடையில் இன்று நடைபெற்ற சபாநாயகர் கிண்ண இருபதுக்கு 20 மென்பந்து கிரிக்கெட் போட்டியில் சனத் ஜயசூரிய தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் அணி 71 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
கொழும்பு டொரிங்டன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் அணித் தலைவர் சுசில் பிரேமஜயந்த முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தார்.
இதன்படி, நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அமைச்சர்கள் அணி பாராளுமன்ற உறுப்பினர்கள் அணியினரை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாராளுமன்ற உறுப்பினர்களின் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களை பெற்றது.
177 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய அமைச்சர்கள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 105 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற தோல்வியை தழுவியது.
இதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அணி 71 ஓட்டங்களால் சபாநாயகர் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது.
ஆட்ட நாயகனாக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும் சிறந்த பந்து வீச்சாளராக ஹர்ஷ டி சில்வாவும் தெரிவானார்கள்.
.இந்த போட்டியை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, சபாயநாயகர் சமல் ராஜபக்க்ஷ, எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment