Thursday, December 15, 2011

ஈராக்கில் போர் முடிவடைந்து விட்டது: ஒபாமா

ஈராக்கில் போர் முடிவடைந்து விட்டதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். ஈராக்கில் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட பின்னர் அந்நாட்டின் பாதுகாப்பு பொறுப்பை அமெரிக்கா ஏற்றது. அங்கு ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். எனினும் தீவிரவாதிகள் தாக்குதலில் அமெரிக்கர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதிக்குள் ஈராக்கில் உள்ள அனைத்து அமெரிக்க வீரர்களும் நாடு திரும்புவார்கள் என்று ஒபாமா அறிவித்திருந்தார்.

அதன்படி பெரும்பாலான வீரர்கள் அமெரிக்கா திரும்பினர். இந்நிலையில் மேலும் ஒரு படை பிரிவினர் நேற்று போர்ட்பிராக் இராணுவ முகாமுக்கு திரும்பினர்.

அவர்களை வரவேற்று பேசுகையில் ஒபாமா கூறியதாவது: ஈராக்கில் போர் முடிந்து விட்டது.ஒன்பது ஆண்டு போராட்டத்தில் அமெரிக்க வீரர்கள் 4,500 பேர் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர்.32 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த போரும்,அமெரிக்க வீரர்களின் தியாகமும் இனி வரலாற்றின் பக்கங்களில் இடம்பெறும். ஈராக் மக்களுக்கான உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து செய்து வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment