ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் சிலரை கொலை செய்ய திட்டமிட்ட முக்கிய புலி உறுப்பினர் கைது
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் 14 பேரை கொலை செய்வதற்கு திட்டமிட்ட மற்றும் தற்கொலை தாக்குதலை நெறிப்படுத்திய எல் .ரி. ரி யின் புலனாய்வு பிரிவின் கொழும்பில் இருந்து செயற்பட்ட முக்கிய நபர் ஒருவரையும், ஐந்து புலி உறுப்பினர்களையும் பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் கைது செய்துள்ளனர் என்று லங்கா சி நிவ்ஸ் கொம் சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதலில் மூன்று தாக்குதல்கள் ஜனாதிபதியை கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், இரண்டு தாக்குதல்கள் காலஞ்சென்ற அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயையும், இரண்டு தாக்ககுதல்கள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவையும் ,மற்றும் மஹிந்த விஜேசேக , தினேஷ; குணவர்த்தன , டளஸ் அழகப்பெரும ஆகிய அமைச்சர்களை தலா ஒரு தடவையும் கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
யுத்தத்தின் போது புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ள புலி உறுப்பினர்களுக்கு, பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்வதற்கு வெளிநாடுகளில் வசிக்கும் புலி ஆதரவாளர்கள் பணம் அனுப்பியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் முடிவு செய்துள்ளதாக அந்த இணையத்தளம் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
0 comments :
Post a Comment