Wednesday, December 21, 2011

தென் கிழக்கு பல்கலைக்கழக அபிவிருத்திக்கு குவைட் அரசாங்கம் உதவ முன்வந்துள்ளது.

அரேபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைட் நிதியத்தினூடாக, தென்கிழக்கு பல்கலைக்கழக அபிவிருத்திக்கு 12 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஒப்பந்தம் நிதியமைச்சில் கைச்சாத்திடப்பட்டது. நிதி திட்டமிடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தரவும், குவைத் அரசாங்கம் சார்பில் அரேபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் ஏஷாம் அல்வக்காயன் ஆகியோர் கைச்சாத்திட்டனர். குவைட் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 7 மில்லியன் டொலர் நிதி உதவியில் இப்பல்கலைக்கழகத்தின் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேநேரம், இன்று பிற்பகல் குவைட் தூதரகத்தில் செய்தியாளர் மாநாடொன்று இடம்பெற்றது. குவைட் அரசு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கான வகுப்பறை மற்றும் அடிப்படை தேவைகளுக்கு, இந்நிதியை இரண்டாம் கட்டமாக வழங்கியுள்ளது.

இவ்வூடகவியலாளர் மாநாட்டில் யாஃகூப் யூசுப் அல்தீக்கும் கலந்து கொண்டார். நாட்டில் உள்ள 25 பாலங்களை நிர்மாணிப்பதற்கும், மொரகொல்ல மின்சார திட்டத்திற்கு 169 மில்லியன் அமெரிக்க டொலர் கனடாக வழங்கப்பட்டுள்ளதாகவும், குவைட் தூதுவர் தெரிவித்தார். இந்த மாநாட்டில் தெற்காசிய நாடுகளுக்கான பிராந்திய முகாமையாளர் வலீத் சாஹ் பக்காரும் கலந்து கொண்டார்.




.

No comments:

Post a Comment