ரிசார்டின் இனவாதம் தொடர்பாக ஜனாதிபதியிடம் முறையிட முடிவு.
மன்னார் விவசாய உற்பத்தி நிலையத்தில் அண்மையில் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. 38 புதிய வெற்றிடங்களுக்காக 37 முஸ்லிம்களும் 1 சிங்களவரும் நியமிக்கப்பட்டுள்னர். தமிழ் மக்கள் பெருபாண்மையாக, வேலைவாய்புக்கள் அற்று இருக்கும் இப்பிரதேசத்தில் றிசாட் பதுர்தீனால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்நியமனங்கள் தொடர்பாக மன்னார் தமிழ் மக்கள் மிக அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதேநேரம் இந்நியமனங்களுக்கான எதிர்ப்பை தெரிவிக்கும் நோக்கில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நிகழ்த்த பா.உ அடைக்கலநாதன் மக்களை திரட்டும் முயற்சியில் இறங்கியிருந்தமையை அறிந்த மன்னார் ஆயர், விடயத்தினை முதலில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொணடு சென்று தீர்வினை பெற்றுக்கொள்ள முயற்சிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார் என தெரியக்கிடைக்கின்றது.
இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதியை சந்திக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் அதே தருணத்தில் எதிர்வரும் 14ம் திகதி மன்னாரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நிகழ்த்த ஏற்பாடாகியுள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி நியமனங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்திற்கு சிங்கள அரச அதிபர் நியமனம் என்பவற்றுக்கு எதிரான கோஷங்கள் இவ்வார்பாட்டத்தின்போது முன்வைக்கப்படவுள்ளது.
...............................
No comments:
Post a Comment