உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின
2011 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. http://www.doenets.lk/exam/ என்ற இணையத்தளத்தின் மூலம் மணவர்கள் பெறுபேறுகளை அறிந்துகொள்ள முடியுமென பரீ்ட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த முறை பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு சில மாத காலம் தாமதம் ஏற்பட்டது.
பழைய மற்றும் புதிய பாடத்திட்டத்திற்கான வெட்டுப்புள்ளிகளை நிர்ணயிப்பதில் ஏற்பட்ட கால தாமதமே பெறுபேறுகளை வெளியிடுவதில் காலதாமதத்தை ஏற்படுத்தியதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மாணவர்கள், பெற்றோர் மத்தியில் உயர்தரப் பரீட்சை வெட்டுப் புள்ளித் தொடர்பில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
வெட்டுப் புள்ளி தயாரித்த முறை தொடர்பில் கல்வி அதிகாரிகள் நாட்டு மக்களை தெளிவுபடுத்த வேண்டும் என ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment