வெள்ளைக் கொடி வழக்குத் தீர்ப்பை எதிர்த்து சரத் பொன்சேகா இன்று மேன்முறையீடு
வெள்ளைக் கொடி விவகார வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக முப்படைகளின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா இன்று (01) மேன்முறையீடு செய்துள்ளார். மேன்முறையீடு தொடர்பான மனு சரத் பொன்சேகாவின் சட்டத்தரணியால் இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டது.
மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழுவில் பெரும்பான்மை அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு சட்டத்திற்கு புறம்பானது என அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வழக்கின் பிரதான சாட்சியாளராக உள்ள பெட்ரிகா ஜேன்ஸின் சாட்சியத்தை முறையாக செவிமெடுக்காது முறைப்பாட்டுக்கு மாத்திரம் அதனை சார்பாகப் பயன்படுத்தியதால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பொன்சேகா தனது மேன்முறையீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முறைப்பாட்டில் கூறப்பட்டிருந்த முக்கிய சாட்சியாளர்கள் வழக்கு விசாரணையின் போது அழைக்கப்படவில்லை எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதனால் மேல் நீதிமன்றத் தீர்ப்பு சட்டத்திற்கு புறம்பானது எனவும் தன்னை அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கும்படி அறிவிக்குமாறும் சரத் பொன்சேகா தனது மேன்முறையீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment