இன்று நத்தார் தினம்
இன்று நத்தார் பண்டிகையாகும்.
நள்ளிரவிற்குப் பின்னர் நாடளாவிய ரீதியாக தேவாலயங்களில் இடம்பெற்ற தேவ ஆராதனைகளில் நத்தாரைக் கொண்டாடும் கத்தோலிக்க, கிறிஸ்தவ மக்கள் மக்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர்.
ஜாஎல, துடல்ல அன்னை மரியாள் தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதனைக்கு அதிமேற்றிராணியார் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமை தாங்கினார்.
சின்னரோம் என்று அழைக்கப்படும் நீர்கொழும்பு நகரிலும் நத்தார் பண்டிகை களை கட்டியுள்ளது.அங்குள்ள தேவாலயங்களிலும் விஷேட ஆராதனைகள் இடம்பெற்றன.
இதேவேளை, நத்தார் தினத்தையிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பெத்லேஹேமில் ஜேசு கிரிஸ்து நாதர் பிறந்தது, மனிதாபிமானம், அன்பு போன்ற பலம் வாய்ந்த பண்புகளை வெளிப்படுத்துவதற்கான முக்கிய உதாரணமாக கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சாதி, மொழி, மதம் இன வேறுபாடுகள் இன்றி மனித குலம் பிரிவினை அற்ற நிலையில் வாழ்வதையே கிருஸ்தவ மக்களின் உறுதிப்பாட்டை இன்றைய தினம் வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
நத்தார் தினத்தை தினத்தை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியான வாழ்கை அமைய வேண்டும் என்று பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
எத்தகைய தராதரம் உடையவராயினும் எத்தகைய பொருளாதார ஸ்திரதன்மையை கொண்டிருப்பினும் பூமியில் வாழ்கின்ற அனைத்து மனிதர்களும் சமமானவர்களே என நடைமுறை ரீதியில் சுட்டிக்காட்டிய உன்னத நிதர்சனமாக இயேசுவின் அவதரிப்பு விளங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
1 comments :
The day on which Lord Jesus was born considered as >Christmas.
"For God did not send His son into
the world to condemn the world,but to save the world through Him"
John-3:17
We pray and beg that He shall save us from our daily sins.
Post a Comment