வட மாகாண குடி நீர் மற்றும் சுகாதார பிரச்சினைகளை தீர்க்க யப்பான் உதவி.
வடமாகாணத்தில் குடி நீர் மற்றும் சுகாதார கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கு ஜப்பான் உதவ முன்வந்துள்ளது. இத்திட்டத்திற்காக வறுமை ஒழிப்பிற்கான ஜப்பானிய நிதியத்தினால் 220 மில்லியன் வழங்கப்படவுள்ளது.இத்திட்டத்தின் கீழ் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் குடிநீர் வசதிகள் மற்றும் சுகாதார கட்டமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. மாதகல்,வட்டக்கச்சி,வலிகாமம்,உள்ளிட்ட 23 கிராமங்களில் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன
பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக தமது சொந்த இடங்களிலிருந்த வெளியேறி மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் வசதிகளை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். 2014 ஆம் ஆண்டு இத்திட்டம் பூர்த்தியாக்கப்படவுள்ளது.
..
1 comments :
Health ,education and the economical developments in the north and east parts of Srilanka are warmly welcomed.Inevitably they need it and
not the dramatic rhyming speeches from the political platforms.We think it's enough, enough.We need something creative.
Post a Comment