தாய்லாந்து அரச குடும்பத்தை அவமதித்த அமெரிக்கருக்கு சிறை
தாய்லாந்தில் தடை செய்யப்பட்ட மன்னரின் சுயசரிதையை மொழிபெயர்த்து இணையத்தில் பதிவு செய்த குற்றத்திற்காக தாய்லாந்து நீதிமன்றம் அமெரிக்கர் ஒருவருக்கு நேற்று இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. அவருக்கு எதிராக பேங்காக் குற்றவியல் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டபோது தாய்லாந்தில் பிறந்த 55 வயது அமெரிக்கரான ஜோ கோர்டன் அமைதியாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கோர்டனுக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை கிடைத்து இருக்கவேண்டும் என்றும் அவர் சென்ற அக்டோபர் மாதம் தாம் குற்றம் புரிந்ததாக ஒப்புக் கொண்டதால் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டது என்று நீதிபதி குறிப்பிட்டார். தாம் ஓர் அமெரிக்கர் என்றும் தாய்லாந்து மன்னரின் சுயசரிதையை மொழிபெயர்த்து இணையத்தில் பதிவு செய்த நடவடிக்கை அமெரிக்காவில் நிகழ்ந்தது என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டதும் கோர்டன் கூறினார். தாய்லாந்து அதிகாரிகள் தம்மை அவ்வளவு எளிதில் விடமாட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment