Thursday, December 22, 2011

பிரதித்தலைவர் பதவியை ஏற்க வேண்டாம் என சஜித்துக்கு வற்புறுத்தல்

> ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாசவை அந்த பதவியை ஏற்காமல் பொறுப்பிலிருந்து விலகுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு குழுவினர் வலியுறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ரணில் விக்கிரமசிங்க கட்சி தலைவராக இருக்கும் வரையில் கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டு செல்ல முடியாது என்பதால், இந்த தீர்மானத்தை எடுக்குமாறு அந்த தரப்பினர் சஜித் பிரேமதாசவை கேட்டுள்ளதாகவும், தலைமைத்துவத்துக்கு அழுத்தங்களை மேற்கொள்ள சிறந்ததொரு முறை இது எனவும் அந்த தரப்பினர் குறித்துக்காட்டியுள்ளனர்.

ஆயினும், பிரதித் தலைவர் பதவியை சஜித் பிரேமதாச பொறுப்பேற்க வேண்டும் எனவும், கட்சிக்குள் இருந்து கட்சியை பலப்படுத்தியபடி ரணிலுக்கு விரோதமாக செயற்பட வேண்டும் எனவும் இன்னொரு தரப்பினர் சுட்டிக்காட்டியள்ளனர்.

No comments:

Post a Comment