ஈரான் மீதான பொருளாதார தடையை அமெரிக்க செனற் சபை ஏகமனதாக அங்கீகரித்தது.
ஈரான் மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்க செனற் சபை ஒருமனதாக அங்கீகரித்துள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக பின் விளைவுகள் ஏற்படக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், செனற் சபையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனை ஆதரி;த்து 100 அங்கத்தவர்கள் வாக்களித்தார்கள். எதிர்த்து எவரும் வாக்களிக்கவில்லை. உத்தேச இந்த தீர்மானத்தின் அடிப்படையில் ஈரானிய மத்திய வங்கியுடன் வெளிநாட்டு நிறுவனங்கள் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் சட்டமாக வருவதற்கு முன்னால், மக்கள் பிரதிநிதிகள் சபை இதனை அங்கீகரிக்க வேண்டும். அத்துடன் ஜனாதிபதி பரக் ஒபாமாவின் அங்கீகாரமும் அவசியமாகும்.
ஐரோப்பிய சமூக வெளிநாட்டு அமைச்சர்கள் பிரெசெல்சில் நேற்று நடத்திய கூட்டத்தில் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளனர். இதேவேளை லண்டனில் உள்ள ஈரானிய தூதுதரக இராஜதந்திரிகள் இன்று நண்பகலுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்கப்பட்டிருந்தனர். தெஹிரானில் உள்ள பிரிட்டிஷ; தூதரகத்தில் சென்ற செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்கள் புகுந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தியதை அடுத்து பிரிட்டன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
0 comments :
Post a Comment